தமிழ்நாட்டில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் புதன்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இறுதிகட்டப் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
திமுக தலைமையில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் இன்று டி.கே. சிவக்குமார் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் வந்திறங்கிய டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
”திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்கின்றன. அனைவரும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழக அரசு மிகச் சிறந்த முறையில் பணியாற்றியுள்ளது. மக்களின் நலனுக்காக நாங்கள் பல்வேறு சிறந்த வாக்குறுதிகளையும் நலத்திட்டங்களையும் வழங்கியுள்ளோம்.
தற்போது அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. மத்திய அரசின் கொள்கையால் சாமானிய மக்களின் வருமானம் குறைந்து வருகிறது.
இந்த நிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையின் கீழ், இத் தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் எளிதான ஒன்றாக அமையும் என்றே நான் கருதுகிறேன். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன், திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்த பிறகு, அனைவரையும் அழைத்து விவாதிக்க வேண்டும். இது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பலனளிக்கக் கூடிய மசோதா அல்ல, நாட்டின் பெண்களுக்கு உதவும் மசோதா.” எனத் தெரிவித்தார்.
Summary
DMK will form the government with a two-thirds majority! — D.K. Shivakumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிலிண்டர் விலை உயர்வு! முதுகில் குத்தும் பாஜக: டி.கே. சிவக்குமார்

அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: அவிநாசி பாஜக வேட்பாளா் எல்.முருகன்

தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்: வைகோ

சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் பங்கேற்பு!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
