12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் டி.கே. சிவக்குமார் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

கர்நாடகத்தில் டி.கே. சிவக்குமார் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம் நடைபெற்று வருவது குறித்து...

The Congress has intensified preparations for government formation

டி.கே. சிவக்குமார் - கோப்புப் படம்

Published On :

பெங்களூரு: காங்கிரஸ் மேலிடத்தின் வழிகாட்டுதலின்பேரில், புதிய முதல்வராக டி.கே.சிவகுமாா் பதவியேற்பதற்காக வழிவிட்டு, முதல்வா் சித்தராமையாவின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் தாவா்சந்த்கெலாட் ஏற்றுக்கொண்டு, அமைச்சரவையையும் ஆளுநர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கலைத்த நிலையில், துணை டி.கே. சிவக்குமார் தலைமையிலான ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கா்நாடகத்தில் அதிகப்பட்சமாக 8 ஆண்டுகாலம் முதல்வராக பதவியில் நீடித்த வரலாற்றை உருவாக்கியிருக்கும் சித்தராமையா, மீதமுள்ள 2 ஆண்டுகளுக்கும் அவரே முதல்வராக நீடிப்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே செய்து கொண்டிருந்த சுழல்முறையில் தலா இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வா் பதவியை வகிப்பது என்ற முடிவின்படி, தற்போது துணைமுதல்வராக இருக்கும் டி.கே.சிவகுமாா் முதல்வராக பதவியேற்பதற்கு வசதியாக, தனது முதல்வா் பதவியை வியாழக்கிழமை சித்தராமையா ராஜிநாமா செய்தாா்.

சித்தராமையா ராஜிநாமா ஏற்பு

முதல்வா் சித்தராமையாவின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் ஆளுநா் தாவா்சந்த்கெலாட் ஏற்றுக்கொண்டு, அமைச்சரவையையும் ஆளுநர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கலைத்தார்.

பெங்களூரில் உள்ள 'மக்கள் பவனில்' இருந்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி,

"இந்திய அரசியலமைப்பின் 164(1) பிரிவின் கீழ் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, கர்நாடக ஆளுநரான தாவா்சந்த்கெலாட், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்வதுடன்; மேலும் அவரது தலைமையிலான அமைச்சரவையையும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கலைக்கிறேன். இருப்பினும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை சித்தராமையா முதல்வராகத் தொடர்ந்து பணியாற்றுவார்," என்று அந்த அதிகாரப்பூர்வ உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மேலிடத்தின் வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து, சித்தராமையா தனது பதவியிலிருந்து விலகிய பின்னரே இந்த நிகழ்வு அரங்கேறியது.

டி.கே. சிவக்குமார் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

இதற்கிடையே, கர்நாடகாவில் டி.கே. சிவக்குமார் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

அமைச்சரவை மாற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் வெள்ளிக்கிழமை தில்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.

கட்சி வட்டார தகவல்களின்படி, முதல்வர் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கர்நாடகப் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

மேலும், மாநிலங்களவை வேட்பாளர்கள், சட்ட மேலவை வேட்பாளர்கள் மற்றும் அமைச்சரவை மாற்றங்கள் ஆகியவை இந்த கூட்டத்தில் முதன்மையான முன்னுரிமை பெறும் விவாதப் பொருள்களாக இருக்கும் என்று கூறப்படுகின்றன.

நான்கு துணை முதல்வர்கள்?

சித்தராமையா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பல அமைச்சர்களுக்கு, டி.கே. சிவக்குமார் தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று வட்டாரங்கள் கூறுகின்றன. அரசாங்கத்தில் சமூக மற்றும் பிராந்திய சமநிலையைப் பேணுவதற்காக, நான்கு துணை முதல்வர்கள் நியமிக்கப்படலாம்.

புதிய அமைச்சரவையில் யதீந்திராவுக்கு வாய்ப்பு

சித்தராமையாவின் மகனும் சட்ட மேலவை உறுப்பினருமான யதீந்திரா, டி.கே. சிவக்குமார் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சித்தராமையாவின் அரசியல் மரபின் தொடர்ச்சியை உணர்த்தும் வகையில், அவருக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு சம்பிரதாய நிகழ்வாகவே கருதப்படும் காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி கூட்டத்தின் தேதி இன்று இறுதி செய்யப்படும் என்றும்; அதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்கும் விழாவின் தேதி முடிவு செய்யப்படும்.

மேலும், கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள நான்கு மாநிலங்களவை இடங்களில், காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களை எளிதாக வெல்லும் நிலையில் உள்ளதாகவும்; மூன்றாவது இடத்தைப் பெறுவதற்குச் சில வாக்குகளே தேவைப்படுவதால், அந்த இடத்தைப் பெறுவதிலும் அக்கட்சிக்குச் சாதகமான சூழல் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.