40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சித்தராமையா காலில் விழுந்து ஆசி பெற்ற டி.கே. சிவக்குமார்!

சித்தராமையா காலில் விழுந்து டி.கே. சிவக்குமார் ஆசி பெற்றது பற்றி...

News image

சித்தராமையா காலில் விழுந்து ஆசிப் பெற்ற டி.கே. சிவக்குமார் - x

Updated On :28 மே 2026, 11:05 am IST

கர்நாடக முதல்வர் சித்தராமையா காலில் விழுந்து துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வியாழக்கிழமை ஆசி பெற்றார்.

கடந்த 2023 சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, முதல்வா் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவகுமாா் இடையே கடும் போட்டி காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, இருவரையும் சமாதானப்படுத்திய காங்கிரஸ் மேலிடம், சுழற்சிமுறையில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகால முதல்வா் பதவிவகிக்கும் சமரச திட்டத்தை முன்வைத்ததை ஏற்று, சித்தராமையா முதல்வராகப் பதவியேற்றார்.

இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலிட உத்தரவை ஏற்று, சித்தராமையா இன்று முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளார்.

முன்னதாக, அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் தனது இல்லத்தில் காலை விருந்தை சித்தராமையா ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விருந்தில் கலந்துகொண்ட டி.கே. சிவக்குமார், சித்தராமையாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அவரை கட்டியணைத்து சித்தராமையா வரவேற்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து இன்று பிற்பகலில் கர்நாடக ஆளுநரைச் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை சித்தராமையா கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Summary

Karnataka Leadership Transition: D.K. Shivakumar seeks his blessings from Siddaramaiah

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.