காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் நிச்சயமாக அணை கட்டியே தீருவோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பேசியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான அறிக்கை தயார் செய்ய எந்த தடையும் இல்லை என்று அதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அணை கட்டுவதற்கான திட்டத்தை விரைவாக முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக, விரைவான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக முதல்வர் விஜய் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் இன்று பேசுகையில், “மேக்கேதாட்டுவில் நிச்சயமாக அணை கட்டியே தீருவோம். தமிழக அரசு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றத்திற்கு கர்நாடக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான முடிவை முன்னெடுத்துச் செல்வோம். இதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனால், மேக்கேதாட்டு அணை விவகாரம் தமிழக - கர்நாடக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
We will definitely build a dam at Mekedatu says DK Shivakumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









