நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி! மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல் திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!
/

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சுக்கு கே.என். நேரு கண்டனம்

மேக்கேதாட்டு விவகராத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சுக்கு கே.என். நேரு கண்டனம் குறித்து...

News image

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு - கோப்புப்படம்

Updated On :24 மே 2026, 5:11 pm IST

மேக்கேதாட்டு அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை மத்திய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சுக்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியிருப்பதாவது:

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை மத்திய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. திமுக சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஆணவப் போக்கு

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது அவரது ஆணவப் போக்கைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து விட்டது. பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது என்ற எண்ணத்தில் சிவக்குமார் இப்படி பேசி இருப்பது போலத் தெரிகிறது. தங்களது காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எதிர்ப்பு இருக்காது என்று நினைத்து, துடுக்குடன் வார்த்தைகளை விட்டுள்ளார் அவர்.

எந்தவித தியாகத்துக்கும் தயங்க மாட்டோம்

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக சிவக்குமார் கூறியிருக்கிறார். காவிரி நதியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட திமுக தலைவர் எந்தவித தியாகம் செய்யவும் தயங்க மாட்டார்.

தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகம்

மேக்கேதாட்டு அணையைக் கர்நாடகம் கட்டுவது என்பது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகம்!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேக்கேதாட்டுவில் எந்தவொரு கட்டுமானப்பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறித் தற்போது மேக்கேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தினை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

காவிரி உரிமைகளை நசுக்கும் விதமாக அமைந்துள்ள கர்நாடக மாநில துணை முதல்வரின் பேச்சுக்கு முதல்வர் இப்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும்.

தொடக்கத்திலே முறியடிக்க வேண்டும்

தமிழ்நாட்டின் போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகி விடக்கூடாது. காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும், அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஒலிக்கிறது - ஒரே உணர்வில் இயங்குகிறது என்பதை, தமிழ்நாடு முதல்வர், தங்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக அரசுக்கு அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்டும் அவர்களது முயற்சியை துவக்கத்திலேயே முறியடிக்க வேண்டும்.

இப்போதாவது - இதற்காகவாவது முதல்வர் விஜய் வாய் திறந்து பேசுவாரா என மக்கள் காத்திருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Summary

Regarding K.N. Nehru's condemnation of Karnataka Deputy Chief Minister D.K. Shivakumar's remarks on the Mekedatu issue...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.