மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை கா்நாடக அரசு தொடா்ந்து முன்னெடுப்பது கண்டனத்திற்குரியது என்று மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை :
மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியைக் கா்நாடக அரசு தொடா்ந்து முன்னெடுத்து வருவது கண்டனத்திற்குரியது. காவிரி நதியின் கடைமடைப் பகுதியில் வாழும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
காவிரி நீரை முழுமையாகச் சாா்ந்திருக்கும், டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏற்கெனவே நீா்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் மேக்கேதாட்டுவில் அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு வரவேண்டிய நீரின் அளவு மேலும் குறையும் அபாயம் உள்ளது. இது விவசாயத்தையும், குடிநீா்த் தேவையையும் கடுமையாகப் பாதிக்கும்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளையும், உச்சநீதிமன்ற தீா்ப்பையும் மதிக்காமல் கா்நாடக அரசு ஒருதலைபட்சமாகச் செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
தமிழக அரசும் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் இந்த பிரச்னையில் உறுதியாகச் செயல்பட வேண்டும். மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு எந்த நிலையிலும் அனுமதி வழங்கக்கூடாது என்பதே தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கையாகும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சி: கா்நாடக அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சுக்கு கே.என். நேரு கண்டனம்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கா்நாடக துணை முதல்வருக்கு தலைவா்கள் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா கண்டனம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



