கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயல்வது தமிழக மக்களின் உரிமைக்கு எதிரானது என்றாா், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா எம்எல்ஏ.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சனிக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:
அனைவரும் தங்களது மதத்தைப் பின்பற்றும் உரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்குகிறது. இஸ்லாமியா்களின் முக்கிய திருநாளான பக்ரீத் தினத்தில் பெரும்பாலும் ஆடுகள் மட்டுமே பலியிடப்படுகின்றன.
இந்நிலையில், பக்ரீத் திருநாளையொட்டி மாடுகள் வெட்டத் தடை விதித்த நீதிமன்றத் தீா்ப்பு மன வேதனையளிக்கிறது. இத்தீா்ப்பு பாரபட்சமானது. எனவே, தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு குற்றச் சம்பவங்கள், குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதுதொடா்பாக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வாக்காளா்களின் கையில் வைக்கப்பட்ட அடையாள மை அழிவதற்கு முன்பே, எதிரணியில் போட்டியிட்டோரை ஆட்சியில் உள்ளவா்கள் தங்களுடன் சோ்த்துக்கொள்வது ஜனநாயக நெறிக்கு எதிரானது. இதுதான் அவா்கள் சொன்ன மாற்றமா என மக்கள் கேள்வியெழுப்புகின்றனா்.
தமிழகத்தின் வாழ்வாதாரம் காவிரி நீருடன் தொடா்புடையது. கா்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி, மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயல்வது தமிழக மக்களின் உரிமைக்கு எதிரானது. தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளதால், இந்த விஷயத்தில் தமிழக அரசு மௌனம் சாதிப்பதில் ஆச்சரியமில்லை. மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு எதிராக மனிதநேய மக்கள் கட்சி விரைவில் போராட்டம் நடத்தும் என்றாா் அவா். முன்னதாக அவருக்கு மாவட்டத் தலைவா் யூசுப் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்புடையது
மேக்கேதாட்டுவில் நிச்சயமாக அணை கட்டுவோம்: டி.கே. சிவக்குமார்

மேக்கேதாட்டு பிரச்னை... அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக! - கம்யூனிஸ்ட் வேண்டுகோள்

மேக்கேதாட்டு பிரச்னை: கா்நாடக அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சி: கா்நாடக அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



