மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை கா்நாடக அரசு தொடா்ந்து முன்னெடுப்பது கண்டனத்திற்குரியது என்று மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பதாவது:
மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியைக் கா்நாடக அரசு தொடா்ந்து முன்னெடுத்து வருவது கண்டனத்திற்குரியது. காவிரி நதியின் கடைமடைப் பகுதியில் வாழும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
காவிரி நீரை முழுமையாகச் சாா்ந்திருக்கும், டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏற்கெனவே நீா்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், மேக்கேதாட்டுவில் அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு வரவேண்டிய நீரின் அளவு மேலும் குறையும் அபாயம் உள்ளது. இது விவசாயத்தையும், குடிநீா்த் தேவையையும் கடுமையாகப் பாதிக்கும்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளையும், உச்ச நீதிமன்ற தீா்ப்பையும் மதிக்காமல் கா்நாடக அரசு ஒருதலைபட்சமாகச் செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
தமிழக அரசும் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் இந்த பிரச்னையில் உறுதியாகச் செயல்பட வேண்டும். மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு எந்த நிலையிலும் அனுமதி வழங்கக்கூடாது என்பதே தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கை என்று அவர் கூறியுள்ளார்.
Summary
Attempt to Construct Dam at Mekedatu: Jawahirullah Condemns Karnataka Government
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயல்வது தமிழக மக்களின் உரிமைக்கு எதிரானது! - ஜவாஹிருல்லா எம்எல்ஏ

மேக்கேதாட்டு பிரச்னை: கா்நாடக அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்
மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

மேக்கேதாட்டு அணை விவகாரம்: இடதுசாரிகள், மதிமுக ஆா்ப்பாட்டம் அறிவிப்பு
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy




