மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

முதுகுளத்தூரில் கபடி போட்டி: கீழமானாங்கரை அணி வெற்றி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சனிக்கிழமை நடைபெற்ற கபடி போட்டியில் கீழமானாங்கரை செண்பகம் செவன்ஸ் அணி வெற்றி பெற்றது.

Updated On :21 மே 2018, 6:22 pm

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சனிக்கிழமை நடைபெற்ற கபடி போட்டியில் கீழமானாங்கரை செண்பகம் செவன்ஸ் அணி வெற்றி பெற்றது.
முதுகுளத்தூர் அருகே கீழமானாங்கரை கிராமத்தில் நடைபெற்ற போட்டிற்கு முதுகுளத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுதர்சன் தலைமை வகித்தார்.
முன்னாள் ஊராட்சி தலைவர் ராமன், கிராமத் தலைவர் ஏ.செம்பன், கபடி கமிட்டி பொறுப்பாளர் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் 22 அணிகள் கலந்து கொண்டன.
இதில் கீழமானாங்கரை செண்பகம் செவன்ஸ் அணி முதல்பரிசை வென்றது. ஏனாதி பூங்குளத்தான் அணி இரண்டாமிடத்தையும் , கீழமானாங்கரை எஸ்.கே. பிரதர்ஸ் மூன்றாவது இடத்தையும், முதுகுளத்தூர் செக்கடி செவன்ஸ் அணி நான்காவது இடத்தையும், பேரையூர் அய்யானார்புரம் அணி ஐந்தாவது இடத்தையும், விளங்குளத்தூர் அணியினர் ஆறாவது இடத்தையும் பெற்றனர்.
போட்டியில் சிறந்த ஆட்டக்காரருக்கான பரிசினை செண்பகம் செவன்ஸ் அணியின் கேப்டன் சதீஸ்குமார் பெற்றார். வெற்றி பெற்ற அணியினருக்கு ஊக்கத் தொகையும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. கபடி போட்டிகளையினை சுற்றுவட்டார கிராம இளைஞர்களும், பொதுமக்களும் பார்வையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.