தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

தேவர் குருபூஜை முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்

கமுதி தனி ஆயுதப்படை அலுவலகத்தில், பசும்பொன் தேவர் குருபூஜை விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :22 அக்டோபர் 2018, 8:22 pm

கமுதி தனி ஆயுதப்படை அலுவலகத்தில், பசும்பொன் தேவர் குருபூஜை விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது.
     ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 111 ஆவது ஜயந்தி விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் தலைமையில், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. காமினி மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
     பின்னர், ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி. திறந்து வைத்தார். இந்தக் கட்டுப்பாட்டு அறை மூலம், திங்கள்கிழமை முதல் மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.