கமுதி ஒன்றியத்தில் 6 கண்மாய்களுக்கு ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கியும் 4 மாதங்களாக பணிகள் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது குறித்து தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால், மீண்டும் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியத்தில் உள்ள விவசாய பாசனம் பெறும் பொந்தம்புளி, காடமங்குளம், எருமைகுளம், முத்தாதிபுரம், கீழராமநதி, நீராவி உள்ளிட்ட 6 கண்மாய்களுக்கு ரூ. 1 கோடியே 98 லட்சம் செலவில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு, தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், கடந்த 4 மாதமாக பணிகள் நடைபெறாமல் நிறுத்தப்பட்டன. மாவட்டத்தில் உள்ள விவசாய பாசனம் பெறும் கண்மாய்களை தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் மராமத்து பணி மேற்கொள்ளாமல், மாவட்ட சார்-பதிவாளர் அலுவலகத்தில் 51 சதவீதத்துக்கு அதிகமான உறுப்பினர்களை கொண்ட பதிவு பெற்ற அந்தந்தப் பகுதி விவசாய சங்கங்களின் மூலம் குடிமராமத்துப் பணிகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இது, விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும், பல்வேறு குறுக்கீடுகள் காரணமாக, குடிமராமத்துப் பணிகள் கடந்த 4 மாதங்களாக நிறுத்தப்பட்டது குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இது குறித்து, கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பேரில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கமுதி ஒன்றியத்தில் உள்ள இந்த 6 கண்மாய்களிலும் குடிமராமத்துப் பணிகள் தொங்கப்பட்டுள்ளன. இது, அப்பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காணாமல்போன 194 பேரை மீட்டு குடும்பத்தினருடன் சோ்த்துவைப்பு தில்லி காவல்துறை நடவடிக்கை

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!

மமதா தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளார்: சுவேந்து அதிகாரி
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

