நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

ராமேசுவரத்தில் சித்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்

ராமேசுவரத்தில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சித்தி விநாயகர் கோயில்  மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

ராமேசுவரத்தில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சித்தி விநாயகர் கோயில்  மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
     ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் சித்தி விநாயகர் தெருவில்  அமைந்துள்ள இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதன்கிழமை மாலை கணபதி பூஜை, புண்ணியாகவாசனம், வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதையடுத்து,  இரண்டாம் கால யாகசாலை பூஜை வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது. பின்னர், காலை 9 மணிக்கு கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
   தொடர்ந்து, சித்தி விநாயகர், தண்டாயுதபாணி, விஸ்வநாதர், விசாலாட்சி, நந்தீஸ்வரர், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.   இதன்பின்னர், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
   இதற்கான ஏற்பாடுகளை, நகர்மன்ற 1 ஆவது வார்டு முன்னாள் கவுன்சிலர் ஆர். ராமகிருஷ்ணன், பாஜக மாவட்டத் தலைவர் கே. முரளிதரன், கே. ராஜேந்ததிரன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.