செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

அபிராமம்-முதுகுளத்தூர் சாலையை அகலப்படுத்த கோரிக்கை

அபிராமம் வழியாக முதுகுளத்தூர் செல்லும் குறுகலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published On :

அபிராமம் வழியாக முதுகுளத்தூர் செல்லும் குறுகலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     கமுதியை அடுத்துள்ளஅபிராமத்திலிருந்து முதுகுளத்தூருக்கு பள்ளிவாசல்,  உடையநாதபுரம் வழியாகச் செல்லும் சாலை ஒத்தையடி பாதை போல் 8 அடி அகலத்தில் உள்ளது. இதனால், முதுகுளத்தூரிலிருந்து உடையநாதபுரம், அபிராமம் வழியாக மதுரை, பார்த்திபனூருக்குச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு பல மணி நேரத்துக்குப் பின்னரே அபிராமத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது.    இந்நிலையில், புறவழிச்சாலை அமைக்கக் கோரி 4 ஆண்டுகளுக்கு முன் அபிராமம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. இதனால், குறுகலான சாலையில் அவசர காலத்துக்கு ஆம்புலன்ஸ், தனியார் வாகனங்கள் கூட இயக்க முடியாமல் உள்ளது.
    எனவே, அபிராமம்-முதுகுளத்தூர் சாலையை அகலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது புறவழிச் சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.