
அபிராமம்-முதுகுளத்தூர் சாலையை அகலப்படுத்த கோரிக்கை
அபிராமம் வழியாக முதுகுளத்தூர் செல்லும் குறுகலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அபிராமம் வழியாக முதுகுளத்தூர் செல்லும் குறுகலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கமுதியை அடுத்துள்ளஅபிராமத்திலிருந்து முதுகுளத்தூருக்கு பள்ளிவாசல், உடையநாதபுரம் வழியாகச் செல்லும் சாலை ஒத்தையடி பாதை போல் 8 அடி அகலத்தில் உள்ளது. இதனால், முதுகுளத்தூரிலிருந்து உடையநாதபுரம், அபிராமம் வழியாக மதுரை, பார்த்திபனூருக்குச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு பல மணி நேரத்துக்குப் பின்னரே அபிராமத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில், புறவழிச்சாலை அமைக்கக் கோரி 4 ஆண்டுகளுக்கு முன் அபிராமம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. இதனால், குறுகலான சாலையில் அவசர காலத்துக்கு ஆம்புலன்ஸ், தனியார் வாகனங்கள் கூட இயக்க முடியாமல் உள்ளது.
எனவே, அபிராமம்-முதுகுளத்தூர் சாலையை அகலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது புறவழிச் சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







