
தொண்டி அருகே மீன் அரைவை ஆலைக்கு எதிர்ப்பு: வட்டாட்சியர் சமரசப் பேச்சு
தொண்டி அருகே மச்சூர் கிராமத்தில் தனியார் மீன் அரைவை ஆலையை மூட வலியுறுத்தும் விவகாரத்தில்
தொண்டி அருகே மச்சூர் கிராமத்தில் தனியார் மீன் அரைவை ஆலையை மூட வலியுறுத்தும் விவகாரத்தில் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியர் அலுவகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
தொண்டி அருகே உள்ள மச்சூர் கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில் மீன் அரைவை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதால் கொடிபங்கு, வட்டாணம், பனஞ்சாயம், தேளூர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுவதாகக்கூறி, கடந்த சில நாள்களுக்கு முன் ஆலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து திருவாடானை வட்டாட்சியர், காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் மக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து திருவாடானை வட்டாட்சியர் சாந்தி தலைமையில் சமாதானக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கிராம நிர்வாக அலுவலர், காவல் துறை அதிகாரிகள், கிராம பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆலையில் இருந்து துர்நாற்றம் வீசாமல் தடுக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் கூறியதை கிராம மக்கள் ஏற்க மறுத்தனர்.
இதையடுத்து கிராமத்தல் இது குறித்து பேசி முடிவு தெரிவிக்கப்படும் என்று கிராம மக்கள் கூறியதால் சமாதானக் கூட்டம் ஒரு நாள் ஒத்தி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






