
உலகக் கோப்பைக்கு முன்பு ஜெய்ஸ்வாலுக்கு போதுமான வாய்ப்பு கொடுக்க வேண்டும்: இர்பான் பதான்
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (கோப்புப் படம்)
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராகும் விதமாக அணிகள் அனைத்தும் இருதரப்பு ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகின்றன.
இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பிரதான இந்திய அணி களமிறங்கவில்லை என உணர்கிறேன். ஜஸ்பிரித் பும்ரா அணியில் இல்லை. ஷ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுகின்றனர். அடுத்தாண்டு உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக இந்திய அணி குறைந்த அளவிலான போட்டிகளிலேயே விளையாடவுள்ளதால், வீரர்கள் அனைவருக்கும் போதுமான அளவுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் ஒரே நேரத்தில் நடைபெறுவது உண்மையில் நல்லது என நினைக்கிறேன். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் ஒருவர் மீது மட்டுமே என்னுடைய பார்வை இருக்கும். இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடரில் தேவையான நேரங்களில் அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படலாம் என்பதால், அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடுவது முக்கியம். உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
Summary
Irfan Pathan has stated that opener Yashasvi Jaiswal should be given sufficient opportunities ahead of the ICC ODI World Cup.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








