ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

கமுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தம்

கமுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்கள், வாடகை வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Updated On :13 பிப்ரவரி 2019, 8:34 am IST

கமுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்கள், வாடகை வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
  கமுதி பேருந்து நிலையம், முத்துமாரியம்மன் கோயில், சந்தைபேட்டை, பெருமாள்கோவில் ஆகிய பகுதிகளில் சாலையோரங்களை சுற்றிலும் ஆட்டோக்கள், சரக்கு, வாடகை வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அரசு, தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கமுதி நகரின் முக்கிய பகுதிகளில் சாலையோரங்களை ஆக்கிரமித்து நிறுத்தபட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்து நெரிசல், விபத்து அபாயத்தை தடுக்க கமுதி போஸீஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள், பேருந்து ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.