தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

"தேர்தலில் வெற்றி பெறவே அதிமுக - பாஜக கூட்டணி'

தேர்தலில் வெற்றி பெறவே அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா தெரிவித்தார்.

Updated On :25 பிப்ரவரி 2019, 7:27 am IST

தேர்தலில் வெற்றி பெறவே அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: கொள்கைக்காக இல்லாமல், தேர்தலில் வெற்றி பெறவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. திமுக, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து இடைத்தேர்தலில் 21 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுகவை தோற்கடித்து, ஆட்சியை கவிழ்க்கப் பார்க்கிறது. அதனால் நாங்கள் எங்கள் ஆட்சியை தக்க வைக்கவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். 
காஷ்மீர் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். நாட்டைப் பாதுகாக்க அதிமுக என்றும் துணை நிற்கும். பாகிஸ்தான் மீது ஏற்கெனவே நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல்போல், மீண்டும் ஒரு துல்லிய தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.