முதுகுளத்தூர்,கடலாடி அரசு கலைக் கல்லூரியில் கூடுதல் பாடப்பிரிவுகளை சேர்க்கவும், நிரந்தரப் பணியாளர்களை பணி அமர்த்தவும் வேண்டுமென பொது மக்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுகுளத்தூர்,கடலாடி,திருவாடனை ஆகிய மூன்று இடங்களில் ஒரே ஆண்டில் அதிமுக ஆட்சியில் புதிய அரசு கலை கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதில் முதுகுளத்தூர்,கடலாடி அரசு கல்லூரிகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக அலுவலர்களை பணியில் அமர்த்தாமல் தற்காலிக ஊழியர்களே பணிபுரிந்து வருகின்றனர்.இதனால் பல்கலைக் கழகத்திற்குச் செல்லும் பணிகள் முடங்கி கிடப்பாதாக ஊழியர்கள் குறை கூறுகின்றனர். மேலும் கல்லூரியின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய கூடுதல் அவகாசம் ஆகிறது. டி.என்.பி.எஸ்.சி, காவலர், ராணுவம், போன்ற பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் வேலை வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. இப்போட்டித் தேர்வுகளுக்கு வரலாறு,அரசியல் அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல் போன்ற பாடங்களில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. முதுகுளத்தூர், கடலாடி அரசு கல்லூரிகளில் இப்பாடத்திட்டங்கள் இல்லை. இதனால் இக்கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவுகளை சேர்க்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்யக்கோரி மாணவர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் 100% வெற்றி பெற்றிருப்பேன்: ரஜினிகாந்த்

எரிபொருள் தட்டுப்பாடு: ரயிலில் சென்ற ராஜஸ்தான் துணை முதல்வர்!

கண்ணுங்களா... செல்லங்களா... விடியோ வெளியிட்ட சூர்யா!
ஃபஹத் ஃபாசில் - பிரேம் குமார் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
