ராமேசுவத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 560 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ராமநாதசுவாமி கோயில், மீனவர் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளில் தொடர்ந்து மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து, ராமேசுவரம் வரும் வாகனங்களை பாம்பன் பகுதியில் கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் சட்ட விரோதமாக 560 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மதுபாட்டில் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். வாகனத்தில் இருந்த தங்கபாண்டி, சுதாகர், இருளவேல் உள்ளிட்ட மூன்று பேரையும் பாம்பன் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







