ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பு

இலங்கைக் கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி  விரட்டியடித்தனர்.

Updated On :23 ஜனவரி 2019, 8:03 am IST

இலங்கைக் கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி  விரட்டியடித்தனர்.
       ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 480-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி பெற்று கடலுக்குச் சென்றனர். நள்ளிரவில் கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் 7 படகுகளில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். மேலும், 25-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த  வலைகளை அறுத்து கடலில் வீசி எறிந்தனர்.
     இதனால் அச்சமடைந்த மற்ற மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரிடமிருந்து தப்பித்து செவ்வாய்க்கிழமை கரை திரும்பினர்.
     படகு ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை செலவு செய்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில், இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலால் பல ஆயிரம் ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாக, மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். 
    எனவே, மத்திய-மாநில அரசுகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.