குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர்

கமுதி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நிறுவனங்கள் மீது விசாரணை

Updated On :24 ஜனவரி 2019, 12:37 am IST

கமுதி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நிறுவனங்கள் மீது விசாரணை நடத்தப்படும் என, மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளார்.
    கமுதி அருகே வல்லந்தை, போத்த நதி, நாராயணபுரம் பகுதிகளில் வேளாண்மை, தோட்டக்கலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள "ஸ்பிரிங்லெர்' மூலம் பாசன வசதி, சிறுதானிய செடிகள் வளர்ப்புக்கான "ஷேர்நெட்' அமைக்க மானியம் வழங்கப்பட்டுள்ள நிலம், வல்லந்தையில் 175 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள பஞ்சாப் விவசாயிகளின் பழப் பண்ணை குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். 
     பஞ்சாப் விவசாயிகளின் முயற்சி மற்றும் வறட்சிப் பகுதியில் கமுதி விவசாயிகளுக்கு முன்னோடியாகச் செயல்பட்டு வரும் பஞ்சாப் விவசாயிகளை, மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். 
   அப்போது அவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு அதிக மழை இல்லாததால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.   
    தோட்டக்கலை, விவசாயத் துறையின் கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் உரிய பயனாளிகளுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கமுதி தோட்டக்கலைத் துறையின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உபகரணங்களில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து மாற்றுத் துறையினரால் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும்.  
  கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கமுதி குண்டாறு அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தனியார் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து செங்கப்படை அதானி சோலார் தனியார் நிறுவனத்துக்கு மின் தகடுகள் கழுவ, குடிநீர் எடுத்துச் செல்லபடுவது குறித்து விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். வரும் மார்ச் மாதத்திலிருந்து குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்புள்ளதால், கிராமங்களில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க டேங்கர்கள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.  
  அப்போது, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள், கமுதி வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.