நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சாயல்குடியில் பா.ஜ.க. ஆலோசனைக் கூட்டம்

சாயல்குடியில் நகர் பா.ஜ.க. ஆலோசனைக்கூட்டம்  புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :24 ஜனவரி 2019, 12:39 am IST

சாயல்குடியில் நகர் பா.ஜ.க. ஆலோசனைக்கூட்டம்  புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகர் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் நாகூர் பாண்டியன், நகர் பொருளாளர் செல்வராஜ், நகர் துணைத்தலைவர் மாரிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டத்தில்  பிரதமர் நரேந்திரமோடி மதுரைக்கு வரும் போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். அந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தவறாமல்  பங்கேற்க வேண்டும் என  கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், பயிர்க்காப்பீடு விரைவில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 கிடப்பில் போட்டுள்ள சாயல்குடி போக்குவரத்து கழக கட்டுமானப் பணியை தொடங்கவும், நகர் பகுதியில் அரண்மனை தெரு சாலையை சீரமைக்கவும், தேவர் நகரில் புதிய சாலை அமைத்து வாறுகால் அமைக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 கூட்டத்தில் மாவட்ட நிர்வாகி சுந்தரமுருகன், தொகுதி பொறுப்பாளர் முருகேசன், கடலாடி மேற்கு ஒன்றியத் தலைவர் கோபாலகிருஷ்ணன், நகர் அணித் தலைவர் சுரேஷ்குமார், நகர் பிரசார பிரிவுத் தலைவர் சிவராஜா, சக்தி கேந்திர பொறுப்பாளர் மகேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.