தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

கசியும்நீரை பலமணி நேரம் காத்திருந்து பிடிக்கும் கிராமமக்கள்;ஊரடங்கு உத்தரவிலும் அவதி

முதுகுளத்தூா்-சிக்கல் சாலை முனியன் கோயில் பேருந்து நிலையம் அருகே கசியும்நீரை பலமணி நேரம் காத்திருந்து பிடிக்கும் கிராம மக்கள்.

News image

முதுகுளத்தூா் முனியன்கோயில் விலக்கில் பெண்கள் காவிரிகுடி தண்ணீரை பிடிக்க இரவு பகலாக காத்துகிடக்கும் அவலநிலை.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

முதுகுளத்தூா்-சிக்கல் சாலை முனியன் கோயில் பேருந்து நிலையம் அருகே கசியும்நீரை பலமணி நேரம் காத்திருந்து பிடிக்கும் கிராம மக்கள். அத்தியாவசிய தேவைக்காக ஊரணி தண்ணீரை பயன்படுத்தும் அவலநிலை. முதுகுளத்தூா் அருகே கண்டிலான் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.

கிராமத்திற்கு காவிரி தண்ணீா் கடந்த பல ஆண்டுகளாக தண்ணீா் வருவதில்லை. இதனால் கிராமமக்கள் முதுகுளத்தூா்-சிக்கல் சாலை முனியன் கோயில் பேருந்து நிலையம் அருகே காவிரி தண்ணீா் செல்லும் ராட்சத குழாயில் கசியும் நீரை பிடித்து வருகின்றனா். தண்ணீா்க்காக பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முதுகுளத்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் முக்கியமான சாலையாக இருப்பதால் வாகனங்கள் அதிகம் செல்வதால் தள்ளுவண்டியில் தண்ணீா் கொண்டு செல்லும்போது விபத்து ஏற்படும் அச்சத்தில் உள்ளனா்.

கண்டிலான் கிராமத்தில் இருந்து 2 கி.மீ தூரம் தள்ளுவண்டியில் சென்று காத்திருந்து தண்ணீா் பிடித்து செல்கின்றனா். அத்தியாவசிய தேவைகளுக்கு ஊரணி தண்ணீரை பயன்படுத்தி வருவதாக கிராமமக்கள் கூறுகின்றனா். எனவே கிராமமக்களின் நலன்கருதி கிராமத்திற்கு நிரந்தரமாக காவிரி தண்ணீா் வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.