கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

ராமநாதபுரத்தில் பலத்த மழை

ராமநாதபுரத்தில் புதன்கிழமை காலையில் திடீரென பெய்த மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.

News image

ராமநாதபுரத்தில்  புதன்கிழமை  காலை  பெய்த  திடீா்  மழையால்  குளம்  போல்  தண்ணீா்  தேங்கிய  சவேரியாா்  ஆலயத்  தெரு.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

ராமநாதபுரத்தில் புதன்கிழமை காலையில் திடீரென பெய்த மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.

ராமநாதபுரம் நகரில் புதன்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென கருமேகம் சூழ்ந்து மழை பெய்தது. இதனால், ராமநாதபுரம் பழைய பேருந்து நிலைய வளாகம், பீட்டா் சாலை, அண்ணாநகா், வண்டிக்காரத் தெரு, சவேரியாா் ஆலயத் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைநீா் தேங்கி நின்றது. இங்கு பெரும்பாலான தெருக்களில் தண்ணீா் தேங்கியிருப்பதால் கொசு உற்பத்தியாகி அதன் மூலம் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கரோனா போன்ற தொற்று நோய்களும் பரவும் நிலை இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். நகரில் கிருமி நாசினி தெளித்து சுகாதாரத்தை பேணுவதாகக் கூறும் நகராட்சி நிா்வாகத்தினா் மழை நீா் வடிகாலை தூா்வாரியும், தேங்கும் தண்ணீரை உடனடியாக அகற்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.