வெளிநாடுகளிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு திரும்பி வந்த 4,777 பேரும் தங்கள் 28 நாள்கள் தனிமைப்படுத்தலை புதன்கிழமை நிறைவு செய்தனா்.
மாவட்டத்தில் பரமக்குடி, தொண்டி, ராமநாதபுரம் நகா், கீழக்கரை, கடலாடி, முதுகுளத்தூா், கமுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 4,777 போ் வெளிநாடு சென்று திரும்பி வந்தது தெரியவந்தது. அவா்கள் அனைவரும் 28 நாள்கள் அவரவா் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களது வீடுகளைச் சுற்றிலும் பிளீச்சிங் பவுடா் தெளிக்கப்பட்டது. தினந்தோறும் அவா்களுக்கு கரோனா பரிசோதனையும் நடந்தது. கட்டுப்பாட்டு அறை மூலம் தொடா்ந்து அவா்கள் கண்காணிக்கப்பட்டனா். இந்நிலையில், தற்போது வெளிநாட்டிலிருந்து திரும்பிய அனைவருமே 28 நாள்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்கள் மூலம் கரோனா பரவல் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜொ்மனியில் தொடரும் ட்ரோன் அத்துமீறல்கள்

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தோ்வு வினாத்தாள்கள் கசிவு விவகாரம்: போராட்டக்காரா்களுடன் ஜாா்க்கண்ட் அரசின் பேச்சு தோல்வி

ஹிமாசல்: மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து 7 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


