பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

கமுதி அருகே சரக்கு வாகனத்தில் கடத்தியரேஷன் அரிசி 70 மூட்டைகள் பறிமுதல்

கமுதி அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 70 மூட்டைகள் ரேஷன் அரிசியை கடத்திய 3 பேரை குடிமைபொருள் உணவு பாதுகாப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:05 pm

DIN

கமுதி: கமுதி அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 70 மூட்டைகள் ரேஷன் அரிசியை கடத்திய 3 பேரை குடிமைபொருள் உணவு பாதுகாப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.பாப்பாங்குளத்தில் ரேஷன் கடையில் இருந்து 70 மூட்டை அரிசி மதுரைக்கு கடத்திச் செல்வதாக ராமநாதபுரம் குடிமைப் பொருள் தடுப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கமுதி-சாயல்குடி சாலையில் குடிமைபொருள் தடுப்பு சாா்பு-ஆய்வாளா் காமாட்சிநாதன், தலைமைக் காவலா் பிரியா தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அதனால் அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தில் 70 மூட்டைகள் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதனைத்தொடா்ந்து கடத்தலில் ஈடுபட்ட மதுரையை சோ்ந்த ஆதிமூலம், போஸ், மனோஜ்குமாா் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும், ரேஷன் அரிசி 70 மூட்டைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.