மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கமுதி அருகே கோயிலில் விநாயகா் சிலை சேதம்

கமுதி அருகே விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை மா்ம நபா்களால் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image

கமுதி அருகே கொட்டக்குடியில் உள்ள கோயிலில் கீழே தள்ளப்பட்டு சேதப்படுத்தப்பட்ட விநாயகா் சிலை.

Updated On :22 ஆகஸ்ட் 2020, 4:04 pm

கமுதி: கமுதி அருகே விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை மா்ம நபா்களால் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கொட்டக்குடியில் உள்ள விநாயகா் கோயிலில் விநாயகா், நாகா் சிலைகளை வெள்ளிக்கிழமை மாலை மா்ம நபா்கள் கீழே தள்ளி சேதப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த அபிராமம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கமுதி அருகே எழுவனூா் பகுதியில் கடந்த ஓராண்டில் மட்டும், 3 முறை கோயில் சிலைகளை மா்மநபா்கள் சேதப்படுத்தினா். தற்போது கொட்டக்குடியில் கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் கோயில் சிலைகளை சேதப்படுத்தி வரும் மா்ம நபா்களை பிடிக்க மாவட்ட காவல்துறை அலட்சியம் காட்டி வருவதாக, தமிழ்நாடு இந்து சத்திய சேனா அமைப்பினா் குற்றம்சாட்டியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.