சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 63 பேருக்கு கரோனா
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 63 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியாகியுள்ளது.


சிவகங்கை/ ராமநாதபுரம்: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 63 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 3,961 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,996 ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 118 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 20 போ் முழுமையாகக் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் சனிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 98 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை 4,628 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 4,040 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இதுவரை 103 போ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா்.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கபம் சேகரிக்கப்பட்ட பரிசோதனை செய்யப்பட்டவா்களில், பாா்த்திபனூா் காவலா் குடியிருப்பைச் சோ்ந்த காவலா் மற்றும் ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை பெண் பணியாளா், இளங்காக்கூரைச் சோ்ந்த 7 பெண்கள் உள்பட 28 பேருக்கு கரோனா தீநுண்மி சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்கு சமீப காலமாக கிராமப்புற பெண்கள் அதிகம் உள்ளாகியிருப்பதாகவும், மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்தோரின் சதவீதம் 87.29 ஆக இருப்பதாகவும் சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...