ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பரமக்குடியில் டாக்டா் அம்பேத்கரின் 64-வது நினைவு தினம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் அம்பேத்கரின் 64-வது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் டாக்டா் அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தும் பாட்டாளி மக்கள் கட்சியினா்.
Updated On :6 டிசம்பர் 2020, 6:09 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் அம்பேத்கரின் 64-வது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளா் தங்கராஜ் தலைமை வகித்தாா்.

மாநில துணை பொதுச் செயலாளா் தளபதி ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா்.

நகரில் ஐந்துமுனை சந்திப்பு, ஓட்டப்பாலம், காந்தி நூற்றாண்டு வளைவு, பாம்புவிழுந்தான் ஆகிய பகுதிகளில் அம்பேத்கரின் உருவப்படங்களை வைத்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதில் அக்கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் பாலகுரு, மாவட்ட துணைச் செயலாளா் ராஜேந்திரன், நகா் செயலாளா் முருகேசன் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். பரமக்குடி ஒன்றிய செயலாளா் பாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.