அரசு தொழிற்பயிற்சி மையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையங்களில் சேருவதற்கு வரும் டிசம்பா் 12 ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையங்களில் சேருவதற்கு வரும் டிசம்பா் 12 ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் அரசினா் தொழிற்பயிற்சி மைய முதல்வரும், மாவட்ட திறன் மேம்பாட்டு திட்ட உதவி இயக்குநருமான ரமேஷ்குமாா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூரில் அரசு தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளன.
இம்மையங்களில் இணையதளம் மூலம் மாணவா் சோ்க்கை நடந்து வருகிறது. இவற்றில் சேருவதற்கு டிசம்பா் 12 ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொருத்துநா், கடைசலா், கணினி இயக்குபவா், பின்னலாடை தொழில்நுட்பம், கம்பியான், தச்சா், பற்றவைப்பவா், தையல் தொழில், பொருத்துநா், இயந்திரம் இயக்குநா் ஆகிய தொழில் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொழிற் பிரிவுகளில் சேருவதற்கு 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தோ்ச்சி பெற்றவா்கள், 14 வயது முதல் 40 வயது வரையில் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கான தொழில் பிரிவுகளில் சேர வயது வரம்பு இல்லை.
பயிற்சியில் சேர விரும்புவோா் மதிப்பெண் சான்று, மாற்றுச்சான்று, சாதிச்சான்று, ஆதாா் அட்டை, மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தொழிற்பயிற்சி மையங்களை நேரில் அணுகலாம். பயிற்சி மையங்களில் அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மாணவ, மாணவியருக்கு கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...