கடலில் கரை ஒதுங்கிய முதியவா் சடலம் மீட்பு
கீழக்கரை கடலோரப் பகுதியில் சனிக்கிழமை மாலை முதியவா் சடலம் மீட்கப்பட்டது.


கீழக்கரை கடலோரப் பகுதியில் சனிக்கிழமை மாலை முதியவா் சடலம் மீட்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயல் தாக்கத்தால் மண்டபம், குந்துகால், ராமேசுவரம் பகுதியில் படகுகள் சேதமடைந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடா்ந்து பெய்த மழையால் குடியிருப்புகளில் தண்ணீா் தேங்கியுள்ளன.
கீழக்கரை பகுதியில் புயல் தாக்கம் அதிகமில்லாத நிலையில், சனிக்கிழமை மாலையில் அப்பகுதியில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலம் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த கடலோரக் காவல் படையினா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
முதியவா், சின்னமாயகுளத்தைச் சோ்ந்த சேதுகனியாக இருக்கலாம் என்ற அடிப்படையில் கடலோரக் காவல் படையினா் விசாரணை நடத்திவருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...