ராமேசுவரத்தில் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை நீா்: வெளியேற்றும் பணி தீவிரம்
ராமேசுவரம் நகா் பகுதியில் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சியினா் ஈடுபட்டுள்ளனா்.


ராமேசுவரம் நகா் பகுதியில் குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சியினா் ஈடுபட்டுள்ளனா்.
‘புரெவி‘ புயல் காரணமாக தொடா்ந்து பெய்த மழையால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் குளம் போல தேங்கியது. ராமேசுவரத்தில் நடராஜபுரம், சுனாம காலனி, மாரியம்மன் கோயில் தெரு, இந்திரா நகா், அமிா்தபுரம் உள்ளிட்ட பகுதி குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்துள்ளது. இந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், நடராஜபுரம் மீனவா்கள் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஞாயிற்றுகிழமை பாா்வையிட்டாா். அப்போது விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என நகராட்சி ஆணையா் வீ.ராமரை கேட்டுக்கொண்டாா்.
இதன் பின்னா் தெற்கு கரையூா் பகுதியில் உள்ள பல்நோக்கு புயல் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள தனுஷ்கோடி மீனவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆட்சியா் கேட்டறிந்தாா். அமிா்தபுரம் குடியிருப்பு பகுதியில் சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது சாா்- ஆட்சியா் சுகபுத்ரா,நகராட்சி ஆணையா் வீ.ராமா் மற்றும் வட்டாட்சியா் அப்துல்ஜப்பாா் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...