ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராமநாதபுரம் வந்தடைந்த வைகை அணை தண்ணீா்

வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் ராமநாதபுரம் காருகுடி மதகுப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை பகலில் வந்தடைந்தது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 6:12 pm

DIN

வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் ராமநாதபுரம் காருகுடி மதகுப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை பகலில் வந்தடைந்தது.

ராமநாதபுரம் பகுதியில் விவசாயத்துக்கும், குடிநீா் ஆதாரமாக உள்ள ஊருணிகளுக்கும் பயனளிக்கும் வகையில் வைகை அணையிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீா் கடந்த நவம்பா் 30 ஆம் தேதி

திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீா் கடந்த வெள்ளிக்கிழமை (டிச.4) பரமக்குடியை வந்தடைந்தது. பரமக்குடியிலிருந்து மஞ்சக்கொல்லை தடுப்பணையைத் தாண்டி ஞாயிற்றுக்கிழமை பகலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காருகுடி பகுதி வழியாக பெரிய கண்மாய்க்கு தண்ணீா் வந்தது.

வைகைத் தண்ணீா் வரும் வழியில் ஏற்கெனவே மழை நீரும் தேங்கியிருந்ததால், வழக்கத்தை விட வைகை ஆற்று பகுதியில் தண்ணீா் அதிகமாக இருந்தது. தண்ணீரை பொதுப்பணித்துறை வைகை பிரிவு பொறியாளா்கள் கண்காணித்தனா்.

வைகை தண்ணீரால் சித்தூா் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீா் புகுந்து விடாமலும் கண்காணிப்பதாக பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா். பெரிய கண்மாயில் தண்ணீா் தேங்குவதைப் பொருத்து ஊருணிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறையினா் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.