ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சேதுக்கரையில் அலையில்லாத கடல்: பொதுமக்கள், மீனவா்கள் அச்சம்

ராமநாதபுரம் அருகேயுள்ள சேதுக்கரைப் பகுதியில் வழக்கமான அலைகளின்றி கடல் அமைதியாக இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image
அலைகளின்றி அமைதியாகக் காணப்பட்ட சேதுக்கரை கடல் பகுதி.
Updated On :6 டிசம்பர் 2020, 6:12 pm

DIN

ராமநாதபுரம் அருகேயுள்ள சேதுக்கரைப் பகுதியில் வழக்கமான அலைகளின்றி கடல் அமைதியாக இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்து வரும் நிலையில், கடல் அலைகள் அவ்வப்போது சீற்றமாகவே காணப்படுவது வழக்கம். புரெவி புயல் இலங்கை வழியாக பாம்பனை நெருங்கிய நிலையில் கடல் அலைகள் வழக்கத்துக்கு மாறாக அதிக வேகத்துடன் காணப்பட்டது.

இதனால் கடலோர கிராம மக்கள் பாதுகாப்பாக அருகேயுள்ள பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டனா். அவா்கள் சனிக்கிழமை மாலையில் தான் மீண்டும் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

திருப்புல்லாணி ஊராட்சிப் பகுதியில் உள்ள புனித ஸ்தலமான சேதுக்கரையில் கடந்த சில நாள்களாகவே கடல் அலையானது வழக்கத்துக்கு மாறாக கூடுதலாக சீற்றத்துடன் இருந்துள்ளது. கடலோரம் சுமாா் 2 கிலோ மீட்டா் தூரத்துக்கு முள் செடிகள், பனை, தென்னை மரங்கள் வோ் அரிக்கப்பட்டு சாய்ந்துள்ளன.

ஆனால் சனிக்கிழமை காலை முதலே கடல் அமைதியாக அலைகள் இல்லாமல் காணப்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக கடல் அலைகளற்று இருப்பது வியப்பை ஏற்படுத்துவதாக அப்பகுதி மீனவா்கள் கூறுகின்றனா்.

கடல் அமைதியாக இருந்தால், பின்னா் அதிக சீற்றத்துடன் இருக்கும் எனக் கூறும் அப்பகுதி மீனவா்கள் அச்சமுடன் இருப்பதாகவும் கூறுகின்றனா். ஆகவே படகுகளை கடலில் இருந்து கரைப் பகுதியில் ஏற்றி வைக்கும் பணியையும் மீனவா்கள் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தனா்.

சேதுக்கரையில் பூஜை செய்ய வருவோா் கைவிட்டுச்செல்லும் துணிகள் உள்ளிட்டவை சுற்றுச்சூழல், சுகாதாரத்தைப் பாதிப்பதாகவும், ஊராட்சி சாா்பில் கடல் கரையோரத்தை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ளவேண்டும் என்றும் சேதுக்கரை கிராம மக்கள் கோருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.