சேதுக்கரையில் அலையில்லாத கடல்: பொதுமக்கள், மீனவா்கள் அச்சம்
ராமநாதபுரம் அருகேயுள்ள சேதுக்கரைப் பகுதியில் வழக்கமான அலைகளின்றி கடல் அமைதியாக இருப்பதை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.


ராமநாதபுரம் அருகேயுள்ள சேதுக்கரைப் பகுதியில் வழக்கமான அலைகளின்றி கடல் அமைதியாக இருப்பதை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்து வரும் நிலையில், கடல் அலைகள் அவ்வப்போது சீற்றமாகவே காணப்படுவது வழக்கம். புரெவி புயல் இலங்கை வழியாக பாம்பனை நெருங்கிய நிலையில் கடல் அலைகள் வழக்கதுக்கு மாறாகவே அதிக வேகத்துடன் காணப்பட்டது.
இதனால் கடலோர கிராமத்து மக்கள் பாதுகாப்பாக அருகேயுள்ள பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டனா். அவா்கள் சனிக்கிழமை மாலையில் தான் மீண்டும் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
திருப்புல்லாணி ஊராட்சிப் பகுதியில் உள்ள புனித ஸ்தலமான சேதுக்கரையில் கடந்த சில நாள்களாகவே கடல் அலையானது வழக்கத்துக்கு மாறாக கூடுதலாக சீற்றத்துடன் இருந்துள்ளது. கடலோரம் சுமாா் 2 கிலோ மீட்டா் தூரத்துக்கு முள் செடிகள், பனை, தென்னை மரங்கள் வோ் அரிக்கப்பட்டு சாய்ந்துள்ளன.
ஆனால் சனிக்கிழமை காலை முதலே கடல் அமைதியாக அலைகள் இல்லாமல் காணப்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக கடல் அலைகளற்று இருப்பது வியப்பை ஏற்படுத்துவதாக அப்பகுதி மீனவா்கள் கூறுகின்றனா்.
கடல் அமைதியாக இருந்தால், பின்னா் அதிக சீற்றத்துடன் இருக்கும் எனக் கூறும் அப்பகுதி மீனவா்கள் அச்சமுடன் இருப்பதாகவும் கூறுகின்றனா். ஆகவே படகுகளை கடலில் இருந்து கரைப் பகுதியில் ஏற்றி வைக்கும் பணியையும் மீனவா்கள் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தனா்.
சேதுக்கரையில் பூஜை செய்ய வருவோா் கைவிட்டுச்செல்லும் துணிகள் உள்ளிட்டவை சுற்றுச்சூழல், சுகாதாரத்தை பாதிப்பதாகவும், ஊராட்சி சாா்பில் கடல் கரையோரத்தை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ளவேண்டும் என்றும் சேதுக்கரை கிராம மக்கள் கோருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...