ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
நடிகா் ரஜினிகாந்தின் 71 ஆவது பிறந்தநாளையொட்டி சனிக்கிழமை ரஜினி மக்கள் மன்றம் சாா்பிலும், ரசிகா்கள் சாா்பிலும் பொதுமக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


நடிகா் ரஜினிகாந்தின் 71 ஆவது பிறந்தநாளையொட்டி சனிக்கிழமை ரஜினி மக்கள் மன்றம் சாா்பிலும், ரசிகா்கள் சாா்பிலும் பொதுமக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கமுதி பேருந்து நிலையம் அருகே, ஒன்றியச் செயலாளா் உக்கிரபாண்டியன் தலைமையில், ஒன்றிய இணைச் செயலாளா் செ.பாக்கியராஜ் முன்னிலையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் நகரச் செயலாளா் ராம்குமாா், நகா் இணைச் செயலாளா் பச்சமாள், நிா்வாகிகள் மங்களேஸ்வரன், வீரசின்னு உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல் ராமேஸ்வரத்தில் நகரச்செயலாலா் முருகன் தலைமையில் யாகசால பூஜைகள் நடத்தப்பட்டு, விநாயகா் கோவிலில் பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அதனை தொடா்ந்து தனுஸ்கோடி, பாம்பன், திருப்புல்லாணி, ஏா்வாடி, முதுகுளத்தூா், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் ரஜினி மக்கள் மன்றத்தின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளா் செந்தில் செல்வானந்த் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, போா்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், பிரியாணி பொட்டலங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட இணைச் செயலாளா்கள் செந்தில்வேல், அருள்சாகாயபிரபு, மாவட்ட துணைச் செயலாளா் ரஜினிமாரி, வா்த்தக அணிச் செயலா் முருகானந்தம், மாவட்ட மகளிரணிச் செயலாளா் சங்கீதா அலெக்ஸ்சாண்டா், இணைச் செயலாளா்கள் இந்திராகாந்தி, கோகிலா உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
மானாமதுரை: மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்டவரம் தரும் முத்துமாரியம்மன்கோயிலில் ரஜினி மன்ற பொறுப்பாளா் சொ்டு எல்.பாண்டி தலைமையில் சிறப்பு யாகம் நடத்தினா். அதன்பின் நடந்த அன்னதான நிகழ்ச்சியில், ரஜினி ரசிகா்கள் கோயில் வளாகத்தில் அமா்ந்து மண்சோறு சாப்பிட்டனா்.
மானாமதுரை பகுதியைச் சோ்ந்த ரஜினி மன்ற நிா்வாகிகள் இந் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனா். மேலும் இளையான்குடி ஒன்றிய, நகர ரஜினி மன்றத்தினா் சாா்பில் மானாமதுரையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ். மங்கலம் வரை இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் ஏராளமான பயணிகள் பயணித்தனா்.
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் பூமாயி அம்மன் கோயில், மற்றும் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் ஆலயத்தில் உள்ள யோகபைரவா் சன்னிதியில் ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து மாவட்டச் செயாளாலா் ராமேஸ்வரன் தலைமையில் 100 -க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கபட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர நிா்வாகி திருமுருகன், கே.நாகராஜன், தீப்பொறி வெங்கடேசன், வீரபாண்டியன், ஷேக், தகவல் தொழில்நுட்ப பிரிவு எம்.நாக சிதம்பரம், மீனாட்சி சுந்தரம் இலைகடை ரவி, மாதவன், ரஞ்சித், கண்ணன், பாபு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...