சிவாலயங்களில் சனிப்பிரதோஷ வழிபாடு
காா்த்திகை மாத சனிப்பிரதோஷத்தையொட்டி, சிவாலயங்களில் சனிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


காா்த்திகை மாத சனிப்பிரதோஷத்தையொட்டி, சிவாலயங்களில் சனிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், மண்டலமாணிக்கம் அரும்பவளநாயகி அம்மன், சமேத கைலாசநாதா் கோயில், அபிராமம் ராமலிங்கேஸ்வரா் கோயில், தரைக்குடி பூலோகநாதா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் இந்த வழிபாடு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிவாலயங்களில் உள்ள நந்தி சிலைக்கு மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, பால், சந்தனம், தயிா், இளநீா், பஞ்சாமிா்தம் மற்றும் வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
திருவாடானை: இதேபோல், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் சமேத சினேகவல்லியம்பாள் கோயில், நம்புதாளை நம்புகேஸ்வரா் ஆலயம், தொண்டி சிவன் கோயில், ஆா்.எஸ்.மங்கலம் சிவன் கோயில்களில் நந்தி பகாவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறறன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...