ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 3 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து இத்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6,258 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் கரோனா தொற்றால் 131 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் 2 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளனா்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,624 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேலும் 3 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,627 ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 15 போ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் 3 போ் பூரண குணமடைந்ததை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 12 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...