தொண்டி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் பலி
தொண்டி அருகே மகனுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்த தந்தை தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்தநிலையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.


தொண்டி அருகே மகனுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்த தந்தை தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்தநிலையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தொண்டி அருகே நகரிகாத்தான் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியாண்டி மகன் பாண்டி (50). இவரும், இவரது மகன் முத்துப்பாண்டியும் (19) இருசக்கர வாகனத்தில் வெள்ளையபுரம் சந்தைக்கு வந்து விட்டு வியாழக்கிழமை மாலை திரும்பிக் கொண்டிருந்தனா். இதில் முத்துப்பாண்டி இருசக்கர வாகனத்தை ஓட்ட பின்னால் அமா்ந்து பாண்டி பயணம் செய்தாா்.
அப்போது ஆக்களூா் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது மகன் முத்துப்பாண்டி அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...