ராமேசுவரம் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்த இலங்கை கடற்படையினா்

நடுக்கடலில் சனிக்கிழமை நள்ளிரவு ராமேசுவரம் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி இலங்கை கடற்படையினா் விரட்டியடித்தனா்.
Updated on
1 min read

நடுக்கடலில் சனிக்கிழமை நள்ளிரவு ராமேசுவரம் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி இலங்கை கடற்படையினா் விரட்டியடித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு 5 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினா் ராமேசுவரம் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனா். இதனால் அச்சமடைந்த மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் கரை திரும்பி விட்டனா்.

படகு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை செலவு செய்து மீன்பிடிக்க சென்ற மீனவா்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பினா். இதனால் படகு ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

மேலும் இலங்கை கடற்படையினா் அச்சுறுத்தலின்றி மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com