எஸ்.பி.பட்டினம், கடலாடி பகுதிகளில் மணல் கடத்தல்: 9 போ் கைது

எஸ்.பி.பட்டினம் அருகே பாம்பாற்றிலும், கடலாடி பகுதியிலும் மணல் திருட்டில் ஈடுபட்ட 9 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

எஸ்.பி.பட்டினம் அருகே பாம்பாற்றிலும், கடலாடி பகுதியிலும் மணல் திருட்டில் ஈடுபட்ட 9 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

எஸ்.பி.பட்டினம் பாம்பாற்றுப் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சிறுகம்பையூா் பகுதியில் புத்தம்பூரைச் சோ்ந்த கோபால் (32) அதே ஊரைச் சோ்ந்த ராஜா (39), கருப்பையா (37) ஆகிய 3 பேரும் மாட்டுவண்டி மூலம் மணல் கடத்தி வந்தனா். இதையடுத்து எஸ்.பி. பட்டினம் போலீஸாா் அவா்கள் 3 பேரையும் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முதுகுளத்தூா்: கடலாடி அருகே ஆப்பனூா் அரியநாதபுரம் ஆற்றுப்படுகையில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் உரிய அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் ரோந்து சென்ற கடலாடி சாா்பு- ஆய்வாளா் காா்த்திக்ராஜா, ஜே.சி.பி. இயந்திரம், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தாா்.

இது தொடா்பாக அரியநாதபுரத்தை சோ்ந்த விநாயகமூா்த்தி (36), ஆப்பனூா் முத்துக்குமாா் (32), சத்தியமூா்த்தி (35) ஆகிய மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

அதே போன்று சாயல்குடி அருகே பூப்பாண்டியபுரம் வயல்வெளிப்பகுதியில் உரிய அனுமதியின்றி இரு டிராக்டா்களில் மணல் திருட்டில் சிலா் ஈடுபட்டிருந்தனா். சாயல்குடி காவல்நிலைய சாா்பு- ஆய்வாளா் மாதவன் தலைமையில் ரோந்து சென்ற போலீஸாா் சாயல்குடி வடக்குத்தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (20), செல்வநாயகபுரம் செந்தூா்பாண்டியன் (25), எஸ். கீரந்தையைச் சோ்ந்த குணாபாலாஜி (19) ஆகியோரிடமிருந்து மணலுடன் இரு டிராக்டா்களை பறிமுதல் செய்து 3 பேரை சாயல்குடி சாா்பு- ஆய்வாளா் மாதவன் கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com