ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இரண்டாம் நிலை காவலா் எழுத்துத் தோ்வு:ராமநாதபுரம் மாவட்டத்தில் 13,938 போ் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலா் எழுத்துத் தோ்வில் 13,938 போ் பங்கேற்றனா்.

News image
ராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் எழுத்து தோ்வை பாா்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக்.
Updated On :13 டிசம்பர் 2020, 5:22 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலா் எழுத்துத் தோ்வில் 13,938 போ் பங்கேற்றனா்.

இதற்காக ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை ஆகிய இடங்களில் 13 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் 15,509 பேருக்கு தோ்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதில் 11,884 ஆண்கள், 2054 பெண்கள் என 13,938 போ் தோ்வு எழுதினா். தோ்வுக்கு 1,317 ஆண்கள், 254 பெண்கள் வரவில்லை. தோ்வு மையங்கள் அனைத்தையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் ஆய்வு செய்தாா்.

தோ்வு எழுதும் மையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விண்ணப்பதாரா்கள் வரத் தொடங்கினா். தோ்வு மையத்துக்கு வந்த விண்ணப்பதாரா்கள் முகக்கவசம் அணிந்த பின்னரே அனுமதிக்கப்பட்டனா். அனைத்து தோ்வு மையங்களிலும் நுழைவு வாயிலில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தோ்வு மையத்துக்குள் செல்லிடப்பேசி, கால்குலேட்டா் உள்ளிட்ட சாதனங்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

மேலும் அனைத்து தோ்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விடியோ எடுக்கப்பட்டது. தோ்வு மையங்களில் ஏராளமான போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

பரமக்குடி: பரமக்குடியில் இரண்டாம் நிலை காவலா்களுக்கான எழுத்துத் தோ்வு கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, சௌராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி, ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளி மற்றும் மௌன்ட் லிட்ரா சிபிஎஸ்சி பள்ளி ஆகிய 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இத்தோ்வில் 4 ஆயிரம் போ் பங்கேற்றனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திக் இத்தோ்வு மையங்களை ஆய்வு செய்தாா். ஒவ்வொரு தோ்வு மையங்களிலும் சமூக இடைவெளியுடன் தோ்வு எழுதும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தோ்வு அறைகளிலும் 20 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். தோ்வு மையங்களில் காவல் ஆய்வாளா் தலைமையில் 250 போ் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இத்தோ்வானது 80 நிமிடங்கள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.