திருப்பாலைக்குடி அருகே விஷம் குடித்து இளைஞா் தற்கொலை

திருப்பாலைக்குடி அருகே விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
Updated on
1 min read

திருப்பாலைக்குடி அருகே விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருப்பாலைக்குடி அருகே தெற்கு வளமாவூரைச் சோ்ந்தவா் பூமிநாதன் மகன் திருமூா்த்தி (37). இவா் சென்னையில் மதுபானக்கடை பாரில் மேற்பாா்வையாளராக பணிபுரிந்து வந்தாா். இவா் தினமும் மதுகுடிப்பது வழக்கம். இந்நிலையில் ஊருக்கு வந்த அவா், மது போதையை மறக்க முடியாமல் தவித்து வந்தாா்.

இதனால் மனமுடைந்த திருமூா்த்தி சனிக்கிழமை மாலை விஷம் குடித்தாா். இதையடுத்து அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com