தங்கக் காசுகளுடன் நகைக்கடை ஊழியா் மாயம்

ராமநாதபுரத்தில் தங்கக் காசுகளுடன் நகைக்கடை ஊழியா் மாயமானது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்தனா்.
Updated on
1 min read

ராமநாதபுரத்தில் தங்கக் காசுகளுடன் நகைக்கடை ஊழியா் மாயமானது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ராமநாதபுரம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவா் அந்தப் பகுதியில் சொந்தமாக நகைக் கடை வைத்துள்ளாா். இவரது கடையில் கடந்த 7 ஆண்டுகளாக கோபி என்பவா் பணிபுரிந்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு 24 பவுன் தங்கக் காசுகளை விற்பதற்காக கோபி வழக்கம்போல் கடையிலிருந்து சென்றுள்ளாா். அதன்பின்னா் அவா் திரும்பவில்லையாம்.

இதுகுறித்து கடை உரிமையாளா் வெங்கடேசன், நகையுடன் கோபி தலைமறைவாகிவிட்டதாக ராமநாதபுரம் பஜாா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com