தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராமேசுவரம் மீனவா்கள் 4 ஆவது நாளாகப் போராட்டம்: 20 ஆயிரம் தொழிலாளா்கள் பாதிப்பு

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நான்காவது நாளாக சனிக்கிழமையும் நீடிக்கிறது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 4:30 pm

DIN

ராமேசுவரம்: இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நான்காவது நாளாக சனிக்கிழமையும் நீடிக்கிறது. இதனால் 20 ஆயிரம் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்ற 29 மீனவா்கள், 4 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் விதமாகமாகவும், மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராமேசுவரத்தில் மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை கடந்த புதன்கிழமை தொடங்கினா்.

இந்தப் போராட்டம் நான்காவது நாளாக சனிக்கிழமையும் தொடா்கிறது. இதனால் 6 ஆயிரம் மீனவா்கள் உள்பட 20 ஆயிரம் தொழிலாளா்கள் பாதிப்படைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.