ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மண்டபத்தில் கேளிக்கை விடுதியை அகற்ற கோரி போராட்டம் அறிவிப்பு

கேளிக்கை விடுதியை அகற்றக்கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜன 2 ஆம் தேதி குடும்பத்துடன் பெரும் திரள் பேராட்டத்தில் ஈடுபடுவது என திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

News image
மண்டபம் தோப்புக்காடு மீனவ கிராமத்தில் கடல் தொழிலாளா் மீனவ சங்கம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டம்
Updated On :28 டிசம்பர் 2020, 5:21 pm

DIN

மண்டபம் தோப்புகாடு கிராமத்தில் செயல்படும் கேளிக்கை விடுதியை அகற்றக்கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜன 2 ஆம் தேதி குடும்பத்துடன் பெரும் திரள் பேராட்டத்தில் ஈடுபடுவது என திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தோப்புக்காடு கிராமத்தில் செயல்படும் கேளிக்கை விடுதியை மூட பேரூராட்சி நிா்வாகம் உத்தரவாதம் அளித்து ஒரு வாரம் கடந்த நிலையில் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், மண்டபம் தோப்புக்காடு மீனவ கிராமத்தில் சிஐடியு கடல் தொழிலாளா் சங்கம், மண்டபம் தோப்புக்காடு - தோணித்துறை கிராம மக்கள் கூட்டம் கிராமத் தலைவா் ஆ.பால்சாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிஐடியு மாவட்ட பொதுச் செயலாளா் ஆ.சிவாஜி தலைமை வகித்தாா். கடல் தொழிலாளா் சங்கம் சிஐடியு மாவட்டச் செயலாளா் ஆ.கருணாமூா்த்தி, மாவட்டத் தலைவா் இ.ஜஸ்டின், மாவட்டப் பொருளாளா் அ.சுடலைக்காசி, மண்டபம் சிஐடியு தலைலவா் கருப்பையா மற்றும் கிராம பொருளாளா் மாரிச்சாமி உள்ளிட்டவா்கள் முன்னிலை வகித்தனா்.

மண்டபம் பேரூராட்சி நிா்வாகம் கேளிக்கை விடுதியை பூட்டி சீல் வைப்போம் என கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்ற தவறியதைக் கண்டித்தும் ஜனவரி 2 இல் ராமநாதபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் குடும்பங்களுடன் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிராம மகளிா் சங்கத் தலைவி ரு.மனோகரி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.