தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ராமேசுவரம்: கடலில் விடப்பட்ட 10 லட்சம் ஃபிளவர் இறால் குஞ்சுகள் 

மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 10 லட்சம் ஃபிளவர் இறால் குஞ்சுகள் ராமேசுவரம் கடலில் சனிக்கிழமை விடப்பட்டது. 

News image
10 லட்சம் ஃபிளவர் இறால் குஞ்சுகள் சனிக்கிழமை ராமேசுவரம் கடலில் விடப்பட்டது.
Updated On :7 நவம்பர் 2020, 11:58 am

DIN

மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 10 லட்சம் ஃபிளவர் இறால் குஞ்சுகள் ராமேசுவரம் கடலில் சனிக்கிழமை விடப்பட்டது. 

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அதிகளவில் இறால் மீன்கள் கிடைக்கும் வகையில் மண்டத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஃபிளவர் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், 10 லட்சம் ஃபிளவர் இறால் குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தங்கச்சிமடம் (பாக் நீரிணை) கடல் பகுதியில் விடப்பட்டது. மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய நிர்வாக குழு உறுப்பினரான கே. முரளிதரன் தலைமை வகித்தார். 

கடல்மீன் ஆராய்ச்சி நிலைய பொறுப்பு விஞ்ஞானி ரெ. ஜெயக்குமார், மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், அலுவலர்கள், மற்றும் மீனவர்கள் பங்கேற்றனர். 2017 முதல் இன்று வரையில் ஒரு கோடியே 7 லட்சம் ஃபிளவர் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளதாக பொறுப்பு விஞ்ஞானி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.