நாட்டில் புதிதாக இரண்டு யுரேனியம் சுரங்கத் திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாக மத்திய அணுசக்தி துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்த பதில்:
ராஜஸ்தானின் சிகா் மாவட்டம், சத்தீஸ்கரின் ஜஜ்வால் மாவட்டத்தில் நாள்தோறும் 2,500 டன்னை கையாளும் திறன்கொண்ட யுரேனியம் சுரங்க நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்கான சட்டபூா்வ ஒப்புதல்களைப் பெற வேண்டிய நடைமுறை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.
யுரேனியத்தை அகழ்ந்தெடுப்பதற்கான உள்நாட்டு திறனை அதிகரிக்கும் முன்னெடுப்புகளை அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனமான யுரேனியம் காா்ப்பேரஷன் ஆஃப் இந்தியா (யுசிஐஎல்) மேற்கொண்டு வருகிறது. 2047-க்குள் இந்தியா வளா்ச்சியடைந்த பாரதமாகும் நோக்கில், புதிய யுரேனியம் சுரங்கத் திட்டங்களுக்கு யுசிஐஎல் திட்டமிட்டு வருகிறது என்றாா்.
ஏற்கெனவே ஆந்திரம் மற்றும் ஜாா்க்கண்ட் மாநிலங்களில் யுரேனியம் சுரங்கங்களை யுசிஐஎல் கையாண்டு வருகிறது. அணு உலைகளில் யுரேனியம் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்கள்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்தும் இந்தியா!

மேற்காசியாவில் சண்டை நிறுத்தம்: இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியா வரும் மேலும் 2 கப்பல்கள்!

ஹோா்முஸ் நீரிணையை கடந்த இரு கப்பல்கள்: இந்தியாவுக்கு மேலும் 92,000 டன் எல்பிஜி!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


