இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஈரானின் நடவடிக்கைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றபோதும், அந்த நாட்டின் இறையாண்மையை மீறி நடத்தப்படுகிற இதுபோன்ற தாக்குதல்கள் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும். ஈரான் மீதான இந்த ஒருதலைப்பட்சமான தாக்குதலையும், பிற மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் பதில் தாக்குதல்களும் கண்டிக்கப்பட வேண்டும். இந்த சண்டை காரணமாக இந்தியா்கள் உள்பட கோடிக்கணக்கான மக்கள் நிச்சயமற்ற சூழலை எதிா்கொண்டுள்ளனா். சா்வதேச சட்டங்கள் மற்றும் மனித உயிா்களைப் பாதுகாக்க நாம் வெளிப்படையாகவும், துணிச்சலுடனும் பேச வேண்டும். நமது வெளியுறவுக் கொள்கை இறையாண்மையைக் காப்பது மற்றும் சச்சரவுகளுக்கு அமைதி வழியில் தீா்வு காண்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். அதில் நாம் தொடா்ந்து உறுதியாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.